* Welcome to SESHA PAAMAALAIGAL!

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae


பக்தர்களின் இதயமே, பகவான் சேஷப்ரம்மத்தின் திருக்கோவில்!”

- பகவான் சேஷப்ரம்மம்



to read Mahaan’s Verses, click:


SESHA PAAMALAIGAL” - Smt. Kanchana Rajesh

For Mahaan’s Verses in English, click:


சேஷா கருணா சாகரா!

சேஷா கருணா சாகரனே,

சேஷா கருணா சாகரனே,

சேஷா கருணா சாகரனே,

சிவனின் அவதாரம் நீயே !

பக்தர்களுக்கு சாரதியாய் வருபவரே

பார்த்தசாரதியின் மறு  உருவம் நீயே !

உன்னுள் சிவதாண்டவமும்உண்டு;

காமாக்ஷியின் கருணையும்  உண்டு !

சேஷா கருணா சாகரனே ……
மங்களம் தரும் மானிட தெய்வம்  நீயே
மலரின் மணத்தினை மாந்தர் மனதில் நிறுத்தி
மயங்க வைக்கும் மாயக்கூத்தனும் நீயே !
சேஷா கருணா சாகரனே ….
சௌபாக்கியம் தரும் சௌந்தர வல்லியும் நீயே
அன்பினை அள்ளித்தரும் அபிராமியும் நீயே !
சேஷா கருணா சாகரனே …..
வரமளித்து  வற்றாத செல்வம் தரும் வாராஹியும் நீயே
தாயாய் வந்து தனி அன்பினைத் தரும்
தாயுமானவரும் நீயே !
வைத்தியராய் வந்து ஆயுளை நீடித்த
வைத்தீஸ்வரனும் நீயே !
சேஷா கருணா சாகரனே
சிறந்த செல்வங்களைத்தரும்
சியாமளா  கிருஷ்ணனும் நீயே !
மண் வளம் மாற்றிய
மஹா  திரிபுர சுந்தரியும் நீயே !
சேஷா கருணா சாகரனே
வாழைத்தோப்பினை வாழ வைத்த
வயலூரானும் நீயே !
குணம் குன்றாமல் குலம் காத்த
கோமளவல்லித் தாயும் நீயே !
சேஷ கருணா சாகரனே
குல தெய்வம் இதுஎன காட்டிய
குண சீலனும்  நீயே !
வேல் வாங்கி தன் பக்தனைக் காத்த
வேலவனும் நீயே !
சேஷா கருணா சாகரனே ….
குருவாய் வந்து குண்டலினியைஎழுப்பிய
குருவாயுரப்பனும் நீயே !
சேஷா கருணா சாகரனே ….

All loves and all passions of the human heart must go to God. He is the Beloved. Whom else can this heart love? He is the most beautiful, the most sublime, He is beauty itself, sublimity itself. Who in this universe is more beautiful than He? Who in this universe is fitter to be loved than He?”

- Swami Vivekananda

(“HUMAN REPRESENTATIONS

OF THE DIVINE IDEAL OF LOVE”, Chapter IX)