Archives

சேஷ நாம மகிமை

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே



சேஷனும் பக்தர்களும்” verse: 1 (27th. July, 2009 – 10 a.m.)

நாளை நாளை என்றிடாமல்
இன்றே (சேஷன்) நாமத்தை நாவில் நிறைத்திடுவாய்
நல்ல பக்தையே/ பக்தனே!

சேஷனும் பக்தர்களும்” verse: 4 (6th. August, 2009 – 7:35 a.m.)

சேஷா சேஷா ஹரே ஹரே!
சேஷநாதா ஹரே ஹரே!
கேசாதி பாதம்
பாதாதி கேசம்
உன் தரிசன்ம்
என் பாபம் தீர்க்கும்
சஞ்ஜீவினி மருந்தல்லோ!

சேஷனும் பக்தர்களும்” verse: 6 (9th. August, 2009 – 7:37 a.m.)

ஞானம் வாழி, தர்மம் வாழி
சேஷன் அடியார் வாழி
அண்ணாமலை அடியார் வாழி
வாழியவே!

சேஷனும் பக்தர்களும்” verse: 8 (10th. August, 2009 – 8 p.m.)

மலை சுற்ற வாருங்கள் (திரு அண்ணாமலை )
மலை சுற்ற வாருங்கள்;
மனதில் மலைப்பாக நிற்பதெல்லாம்
மாயமாய் மறைந்திடுமே;
மா மன்னனும் மலை சுற்றினால்
மனித குலமும் மேம்படுமே!
மலையோனும் (அண்ணாமலை )
மனம் மயங்கி
நம்மை மனிதருள்
மாணிக்கம் ஆக்கிவிடுவானே!”

சேஷனும் பக்தர்களும்” verse: 16 (20th. August, 2009 – 12:08 p.m.)

பஜரே ஸ்ரீ சேஷ நாமம்! ஸ்ரீ சேஷ நாமம்!”

சேஷனும் பக்தர்களும்” verse: 23 (22nd. August, 2009 – 6 p.m.)

சேஷ பஜன்
ஸ்ரீ சேஷா! ஸ்ரீ சேஷா! ஸ்ரீ ஸ்ரீ சேஷாவே!
ஜய சேஷா! ஜய சேஷா! ஜய ஜய சேஷாவே!
சிவ சேஷா! சிவ சேஷா! சிவ சிவ சேஷாவே!
ஹரி சேஷா! ஹரி சேஷா! ஹரி ஹரி சேஷாவே!

சேஷனும் பக்தர்களும்” verse: 24 (23rd. August, 2009 – 5 p.m.)

ஸ்ரீ சேஷா ஹரே
சேஷநாதா ஹரே!
காருண்ய வாசனே, கைத்ததொழுவோம்!
வையகம் வாழ்த்தும்,
வைர நெஞ்ச்மே,
கைத்ததொழுவோம்!
கொடுத்து கை சிவந்து கொடையாளியே!
கைத்ததொழுவோம்!
கவலையை கலைத்திடும் கான நாதனே!
கைத்ததொழுவோம்!
பெருமை சேர்த்திடும் பேரொளியே!
கைத்ததொழுவோம்!
ஸ்ரீ சேஷா!…

சேஷனும் பக்தர்களும்” verse: 25 (24th. August, 2009 – 7 a.m.)
சேஷ காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
சேஷாத்ரி நாதாய தீமஹி
தன்னோ ஸத்குரு ப்ரசோதயாத்!

சேஷனும் பக்தர்களும்” verse: 31 (31st. August, 2009 – 5:15 a.m.)

சுயஞ்ஜோதி (நீல புருஷன் – பிந்து)யாய் உள்ள
சேஷனே போற்றி!
அருவமும் உருவமுமானாய் போற்றி!
ஆரா அமுதே அருளால போற்றி!
ஆட்பட்டவருக்கு அன்பு மிக காட்டுபவரே போற்றி!
துவக்கமும், நடுவும், முடிவும்,

ஆகிய அனைத்தமாய் இருப்பவரே போற்றி!
உனது திருவிளையாடடலில்

வெற்றியின் வடிவு கொண்டவ்ரே போற்றி!
திருவண்ணாமலை யில் நீ ஸ்தூலமாய் இருந்தாலும்,
பக்தர்களின் இதயமே உன் திருக்கோவில் போற்றி!
அருள் பசியை போக்கும் அருளே போற்றி!
ஸாம்ப ஸதாசிவா! சேஷா போற்றி!
ஸம்போ கங்கா! சேஷா போற்றியே!

சேஷனும் பக்தர்களும்” verse: 37 (6th. September, 2009 – 7 a.m.)
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமி பக்தர்களாகிய நாம்,
தர்மத்தை வெற்றி காண நினைக்கும்

கலியனை வி ரட்டிடும்,
வெற்றி வாய்ந்த சேஷ மந்திரத்தை,
(
ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவடிக்கே! – மூல மந்திரம்),
சுவையாக ஸங்கீர்த்தனம் செய்து பாடுவோமே! ஆனந்தம் அடைவோமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 37 (6th. September, 2009 – 7 a.m.) (தொடர்ச்சி..)
வாயிலே வாசனை வந்து விடுமே!
செல்வமும் ஞானமும் சேர்ந்து செழிப்பாகுமே!
முன்வினை களும் மறைந்துவிடுமே!
முக்கண்ணனின் (சேஷாத்திரி) மூல மந்திரத்தை
முக்காலமும் முழு மனதுடன் ஓதுவோமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 48
(25th. September, 2009 – 7:28 a.m.)

மும்மூர்திகளின உறை விடமாம் எங்கள் சேஷ பிரம்மம்!
சேஷ பிரம்மத்தை நாடுங்கள்
நாள்தோரும் வாடாமலர் கொண்டு.
பாடுங்கள் அவன் நாமம்,
நவராத்திரி நன்னாளில்,
மாயா கூத்தனாம் சேஷன்,
நிறைவு செய்து விடுவானே நீங்கள் நினைப்பதை!
சேஷா! சேஷா! என்று ஓதீடு ஏதும் வராதே!

சேஷனும் பக்தர்களும்” verse: 53
(28th. September, 2009 – 8:00 a.m.)

ஸ்ரீ குருநாதா, நீயே ஸரஸ்வதியே!
நான் உனை பாட நாவண்மையை தருவாய்!
ஸ்ரீ சேஷா, நீயே ஸரஸ்வதியே!
நாவால் உனை மட்டும் பாட அருள் தருவாய்!
ஸ்ரீ சேஷா, நீயே ஸரஸ்வதியே!
உன் பக்தர்கள் மனதில்
நீ மட்டும் நிலைத்திருக்க அருள் புரிவாய்…ஸ்ரீ சேஷா!

சேஷனும் பக்தர்களும்” verse: 58 (1st. October, 2009 – 7:00 a.m.)

சேஷன் ஓம்கார ஸ்வரூபம்”
வேழ முகத்தோனுக்கு நிகராக உள்ள சேஷனே!
கண்ணத்தில் கைவைத்து ‘ஸ்வஸ்திகா’ ஆசனமிட்டு
ஓம்கார ஸ்வரூபமாய் காட்சி கொடுத்து,
பக்தர்களின் விக்னங்களை நீக்கிடும் சேஷப்ரம்மே!
பக்தர்களுக்கு இன்று இனிய நாளாக அமைந்திட
அபயம் தந்திடுவாய் சேஷப்ரம்மமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 63 (6th. October, 2009 – 7:10 a.m.)

சேஷன் ஸ்துதி”
சேஷன் திருநாம ஸ்துதி பாடுவோமே
ஸர்வ மங்களங்களும் சத்தியமாய் உண்டாகுமே !
உண்டாகுமே உங்கள் உள்ளத்தில் உள்ளொளி
உள்ளொளி பெறுகினால், உன்டாகுமே உள்ளத்தில் உவகை,
உவகையால் உள்ளம் பூரிக்குமே!
சேஷன் திருநாம ஸ்துதி பாடுங்கோ!
ஆத்ம பலம் பெறுங்கோ!

சேஷனும் பக்தர்களும்” verse: 65 (8th. October, 2009 – 11:00 a.m.)

சத்தியமே, சேஷனின் சொல்லும் செயலும்;
சரணாகதியே சேஷ பக்தர்கள் செய்ய வேண்டியது;

சர்வேஷ்வரனாம் சேஷன்!
ஸர்வ மங்களமும் சத்யமாக சேர்த்திடுவானே
பக்தர்களின் இல்லத்திலே!
உள்ளத்திலே சாஷ்டாங்கமாய் சேவித்திடு சேஷனை,
ஓ பக்தா!

சேஷனும் பக்தர்களும்” verse: 70 (18th. October, 2009 – 11:00 a.m.)

தித்திக்கும் சேஷ மந்திரம்”
தேன் போன்று தித்திக்குமே சேஷ மந்திரம்,
தேஜோமயமான த்ரிகால ஞானியின் சொல்லும் தித்திக்குமே,
தந்தையும் தாயுமான சேஷனின் செயலும் தித்திக்குமே,
தனிமையில் (ஜெபத்தில் – சேஷ மந்திரம்) திளைத்தால்,
தன்னைக் காட்டுவானே தங்கமயமான நம் சேஷநாதன்!
தாங்கிடுவானே, தங்க மயமான சேஷ பக்தர்களின்,
தாளமுடியாத துன்பங்களை, துடைத்திடுவானே, தூயவனாம், நம் சேஷநாதன்!

சேஷனும் பக்தர்களும்” verse: 91 (28th. October, 2009 – 4:18 p.m.)

பழித்தவனை மறந்துவிடு,
சேஷனின் மந்திரத்தை ஜெபித்து விடு,
ஜெகந்நாதனாம் நம் சேஷன்,
உனக்கு ஜெயத்தைகொடுத்துவிடுவானே!

சேஷனும் பக்தர்களும்” verse: 97 (29th. October, 2009 – 6:00p.m.)

காமாக்ஷிரூபனே சேஷ குரோ!
கால விநாசனே சேஷ குரோ!
காலக்னி நாதனே சேஷ குரோ!
அர்த்தநாரீஸ்வர சேஷ குரோ!
அபயம் தந்திடுக சேஷ குரோ!
அருள் புரிந்திடுக சேஷ குரோ!

சேஷனும் பக்தர்களும்” verse: 99 (29th. October, 2009 – 7:45p.m.)

கண்கண்ட தெய்வமாம் நம் சேஷனின் திருவடிகளுக்கு
கதம்ப மாலை சாற்றினால்,
நம் கஷ்டங்களை சேஷன் கலைத்திடுவானே!
காலமெல்லாம் கவலையில்லாமல், களிப்புடன் இருப்போமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 103

(16th. November, 2009 – 7:00 a.m.)

ஜெகம் புகழும் ஜெகத்குரோ சேஷாத்ரி;
ஜெயம் தருமே உன் நாமம் சேஷாத்ரி;
ஜெபித்திட ஜெபித்திட உன் நாமத்தால் வெற்றியே சேஷாத்ரி;
ஜென்ம வினைகள் பொசுங்கிவிடுமே
உன் நாம மஹிமையால் சேஷாத்ரி

சேஷனும் பக்தர்களும்” verse: 117 (20th. March, 2010)

நம் சேஷன்

தும்பைப் பூவைப்போல் தூயவன் நம் சேஷன்
பிச்சிப் பூவைப்போல் பிஞ்சு மனமுடையவன் நம் சேஷன்
வாடாமலர் போல் வாடாத மனமுடையவன் நம் சேஷன்

அருவி நீர் கொட்டுவது போல் அனுக்ரஹத்தைஅள்ளிக்கொடுப்பவன் நம் சேஷன்
அளவில்லாத அன்பினை ஆர்ப்பாட்டமின்றி தருபவன் நம் சேஷன்
அன்பினை பாசமாக்கி பக்தர்களுக்கு தருபவன் நம் சேஷன்

அருகிலிருந்தாலும் தூரத்திலிருந்தாலும்
அவரவர்க்கு ஏற்றபடி (வினைப்பயன்)
ஆனந்தம் தருபவன் நம் சேஷன்

மலர்களை வண்டுகள் ரீங்காரம்
செய்து கொண்டு சுற்றுவது போல்
பக்தர்களை சுற்றிச் சுற்றி வருபவன் நம் சேஷன்

ஹ்ரீங்காரமான மஹா திரிபுர சுந்தரியின்
வடிவானவன் நம் சேஷன்
ஸ்ரீம்காரமான மஹாலக்ஷ்மியாய்

நம்முடன் என்றும் வாசம் செய்பவன் நம் சேஷன்
ஓம்காரம்என்னும் பிரணவ நாதமாய்

என்றும் நம் காதுகளில்
ஒலித்துக்கொண்டிருப்பவன் நம் சேஷன்

க்லௌம் கம்கணபதியாய் வந்து நம் விக்னங்களை உடைத்தெறிபவன் நம் சேஷன்
பிரணவபொருளை நம்

மனதில் புகுத்தும் சேஷப்ரஹ்மம்நம் சேஷன்
ஓம் நமசிவாயமாகிதன்னை சிவன்என்று

காட்டுபவன் நம் சேஷன்
வாழ்க நமசிவாயம்,

சேஷன் வாழி வாழியவே,
வாழி வாழியவே!

சேஷனும் பக்தர்களும்” verse: 121 (14th. April, 2010)

பாரினில் பரிதவித்த பாவிகளுக்கு பாப விமோசனம் அளித்த
பரமேஸ்வரனே, சேஷப்ரமனே !

பரிதவித்த சேஷ  பண்பாளர்களுக்கு
பரலோகம் காட்டிய
பரமேஸ்வரனே, சேஷப்ரமனே !

சத்யவான்களாகிய உன் பக்தர்களுக்கு கனவில்
சத்தியலோகத்தை காட்டிய
பரமேஸ்வரனே, சேஷப்ரமனே !

உயர்ந்த எண்ணங்கள் உடைய உன் பக்தர்களுக்கு
உன் அருவ நிலையை, ஒளியாக (பிந்து) காட்டிய
பரமேஸ்வரனே, சேஷப்ரமனே !

சதா சேஷ மந்திரம் சொல்லும் உன் பக்தர்களின் காதுகளில், நாதப்ரம்மமாய் (sound of OM ) ஒலித்துக்கொண்டிருக்கிறாய்
பரமேஸ்வரனே, சேஷப்ரமனே !

வானவில்ஒளிகளை (light -bindu)
உன் பக்தர்களுக்கு தியானம் செய்யாமலே
(without doing meditation )
கண் மூடிய நிலையில் ஞானக்கண்ணால் காண வைக்கும்
பரமேஸ்வரனே, சேஷப்ரமனே !

நாதமும் நீயே, பிந்துவும் நீயே !
(sound and light -formless )
அருவநிலையிலும், உருவ நிலையிலும்

உன் பக்தர்களுக்கு அநுகிரகம் (anugraham )அளிக்கும்
நவகிரஹ நாயகனே
! நல்லோர் வணங்கும்
பரமேஸ்வரனே
, சேஷப்ரமனே !

உன் திருவடி தொட்டு, எங்களின் அனந்தகோடி நமஸ்காரங்களை,

தமிழ் புத்தாண்டான இன்று (14 .04 .2010 ) சமர்ப்பிக்கின்றோம்,
ஆதி அந்தம் இல்லாத அருணாச்சல சேஷ சிவனே, பரமேஸ்வரனே, சேஷப்ரமனே !

சிற்றம்பலம்

சேஷனும் பக்தர்களும்” verse: 122 (23rd. April, 2010)

வெள்ளை கிளி போல்
வெள்ளை மனம் கொண்ட உன் பக்தர்களிடம்,
வெண் பொங்கலின் வாசனையாக
காற்றினில் கலந்து வந்து உறவாடும்,
வெண்ணிற மேனியனே சிவசேஷனே !
வெண்ணிற விபூதியில் இரண்டற கலந்து,
பக்தர்களுக்கு வெற்றியை தேடி தரும்
வெண்ணிற மேனியனே சிவ சேஷனே !
வாழ்நாள் முழுவதும் பக்தர்களை வாழ வைப்பது
உன் சேஷ மந்திரமே, வெண்ணிற மேனியனே !
வாழ்க உன் திரு நாமம்!

சேஷனும் பக்தர்களும்” verse: 123(26th. April, 2010)


பூக்கள் பலவிதம்.
பூக்கள் தனியாக பூத்து இருப்பதை விட
பூக்கூடையில் ஒன்று சேர்ந்து இருக்கும் போது
பூலோக வாசிகளுக்கு

அதனை பார்த்து ரசிப்பதில் தனி இன்பம் !
பக்தர்கள் பலவிதம்.
சேஷ பக்தர்கள்  தனியாக பூத்து இருப்பதை விட
அவதார் சேஷாத்ரி பக்த சமாஜத்தில்
(பூக்கூடையில்) ஒன்று சேர்ந்து இருக்கும் போது
ஸ்ரீ சேஷாத்ரி பிரம்மத்திற்கு,
அதனை பார்த்து ரசிப்பதில் தனி இன்பம் இருக்குமே !

சேஷனும் பக்தர்களும்” verse: 124(27th. April, 2010)

அலை கடற்கரையை தொடுவது போல ,
உன்னை நான்  தொடுவதும்
பின் அலை போல்  திரும்பிச் செல்வதுமான
நிலையில்லாத வாழ்க்கை வாழ்ந்தேன்,

சிவ சேஷனே !
பிறகு கட்டுக்கோப்புடன்
சேஷ மந்திரம் ஜெபம் செய்தேன்,
வாழ்க்கை நிலையானது,

கோட்டை(Fort) போல, சிவ சேஷனே !
சஞ்சலம் (jealousy), அஹங்காரம் (Ego) போன்ற
மேகங்கள் (Clouds) கலைந்தன,

உன் மகிமையால், சிவ சேஷனே !
நீல ஒளியான உன்னை வானத்தில் கண்டேன்,

சிவ சேஷனே !

சேஷனும் பக்தர்களும்” verse: 125(29th. April, 2010)

மலை சுற்றினால் (கிரிவலம் ) தலை சுற்றுதே
என்று நினைத்த பக்தருக்கு;
உன் மந்திரம் (சேஷ மந்திரம்) சொல்லி

மலை சுற்றியவுடன்
தலை சுற்றலும் நின்றதே.!
சிவ சேஷாத்ரி நாதா !

இந்த கலியுகத்தில்
நீ நடத்தும் லீலையன்றோ இது !
மேல் அதிகாரியை நினைத்தால்
மயக்கம் வருகிறதே
என்று நினைத்த பக்தருக்கு :
உன் மந்திரம் சொல்லி அலுவலகம் சென்றதும்
மேல் அதிகாரிக்கு மயக்கம் வந்ததே !
சிவ சேஷாத்ரி நாதா !

இந்த கலியுகத்தில்
நீ நடத்தும் லீலையன்றோ இது !
பனையளவுக்கு வளர்ந்த துன்பத்தை
தாங்கமுடியாத உன் பக்தருக்கு ;
உன் மந்திரம் சொல்லி

பண்ணைக்கு சென்றவுடன்
பாம்பும் துவண்டு போனதே !
சிவ சேஷாத்ரி நாதா !

இந்த கலியுகத்திலும்
நீ நடத்தும் லீலையன்றோ இது !
கடனில் மூழ்கி தத்தளித்த
செயலற்றுப்போன உன் பக்தருக்கு;
தொழிற்சாலை சென்றதும்

தொழில் உயர்வு கிடைத்ததே !
சிவா சேஷாத்ரி  நாதா !

இந்த கலியுகத்திலும்
நீ நடத்தும் லீலையன்றோ இது !
உன்னாலா ?அல்லது என்னாலா?
எது ? யாரால் நடக்கிறது ?

என்று நினைத்த  உன் பக்தருக்கு;
உன் மந்திர லீலையால் தான்

எல்லாம் நடந்தது என்று புரிய வைத்தாயே!
சிவ சேஷாத்ரி நாதா !

இந்த கலியுகத்திலும்
நீ நடத்தும் லீலையன்றோ இது !
உன் திருவிளையாடல்கள் தொடர்ந்து நடந்திட
உன்னை கொன்றை மலர்களால் அர்ச்சித்து
உன் அநுக்ரகம் பெற்றிடுவோம்

சிவ சேஷாத்ரி நாதா !

சேஷனும் பக்தர்களும்” verse: 126(2nd. May, 2010)

ஆதவன் மாலை நேரத்தில்
தன் கதிர் வீச்சால்
வெண்ணிற மேகக் கூட்டங்களை
வண்ணமயமாக்குகிறான்.

சேஷனும், விரக்தியாக இருக்கும் நேரத்தில்
தன் அனுக்ரஹத்தால்

பக்தர்களின் வாழ்வினை
வண்ணமயமாக்குகிறான்.

சேஷனும் பக்தர்களும்” verse: 127(2nd. May, 2010)

வண்ணப்பூக்கள் மிகுந்த வனத்தில்
வண்ணத்து பூச்சிகள் மதுவை தேடி

வண்ணப்பூக்களை நாடுவதுண்டு
;

சேஷன் அநுக்ரகம் என்னும் மதுவை,
பக்தர்கள் மனதிற்குள்
புகுத்தி, அற்புதங்கள் நடத்துவதை

சில பக்தர்களே அறிவார்கள்,
பலர் அறியமாட்டார்கள் .

அதுதான் சேஷ லீலை.

சேஷனும் பக்தர்களும்” verse: 130 (7th. May, 2010)

நிகில் (Nikhil) முகிலை (மேகம் ) நோக்கும்போது
முகிலில் நீ காட்சி தருவது நிகிலுக்கே புரியும்:

நினைவில் நீயே நிலைத்து  நிற்கிறாய்
என நினைக்கும் பக்தருக்கே
நீ கருணை மழை பொழிகிறாய் என்பது புரியும்

நான் மறை (நான்கு  வேதங்கள்) ஓதியோருக்கும்
நீ குருவாக காட்சி அளித்து
நிர்வாணத்தைநினைக்க வைக்கிறாய் !

இறைவா சிவசேஷனே !
ஆதிமூலமே அருணாச்சல சேஷனே !

சேஷனும் பக்தர்களும்” verse: 131 (10th. May, 2010)

மின்னல் வேகத்தில்
உன் பக்தருக்கு  காட்சி  தரும்
அவதார சேஷா !
மின்னலைக்காட்டிலும் மனோ வேகத்தில்
தெய்வீக அருளுரை தரும்
அவதார சேஷா !

மின்னல் ஒளி போல் பக்தர்
வாழ்க்கையை ஒளிமயமாக்கிடும்
அவதாரா சேஷா !

மின்னல் ஒளி நொடியில் மறைந்தாலும்,
பக்தருக்கு நீ தரும் ஒளிஎன்றும் மறையாதே

அவதார சேஷா !

சேஷனும் பக்தர்களும்” verse: 133 (12th.May, 2010)

ஊதா பூ  தியானத்தின் உன்னத
நிலையை (7 -ம்) வெளிப்படுத்துகிறது;

உன் மந்திர ஒளியும் தியானத்தின் உன்னத
நிலையை வெளிப்படுத்துகிறது;
உன்னை பற்றியவருக்கு உன் உன்னத
நிலையை உணர முடிகிறது;
உன் அற்புதங்கள் உன் பக்தர்களுக்கு
நிலையான நிம்மதியை தருகிறது ,சேஷநாதா !

சேஷனும் பக்தர்களும்” verse: 134 (14th. May, 2010)


வண்ணத்து பூச்சியின் இறகின்
மென்மை போன்ற
மனம் படைத்தவர்கள்
உன் பக்தர்கள்,
ஹரி ஓம் சேஷா !

மலர் இதழின்
மென்மை போன்ற
மனம் படைத்தவர்கள்

உன் குழந்தை பக்தர்கள்,
ஹரி ஓம் சேஷா !

வண்ணத்து பூச்சிகளை
தன் வசம் இழுப்பது மலரின்
உள்ளே இருக்கும் தித்திக்கும் மது (தேன்-honey),
ஹரி ஓம் சேஷா !

பக்தர்களை தன் வசம் இழுப்பது
சேஷனின் உள் வடிவமாக இருக்கும்
தித்திக்கும் சேஷ மந்திரம் (divine honey)
ஹரி ஓம் சேஷா !


சேஷனும் பக்தர்களும்” verse: 135 (14th. May, 2010)

விழுதுகள் நிறைந்த ஆலமரம் (Banyan Tree)
பலருக்கு நிழல் தருகிறது
பழுதற்ற  பக்தர்களுக்கு
சிவ சேஷன் நிழலாக காட்சி தருகிறார்
ஆலமரம் காற்றினை தூய்மை படுத்துவது போல்
அவதார  சேஷனும்
பக்தர்களின் அகத்தினை
தூய்மை படுத்துகிறார்

சேஷனும் பக்தர்களும்” verse: 137 (18th. May, 2010)


சூரியன் ஹஸ்தமித்தாலும்
மின் சக்தியால் இரவை பகலாக்குகிறோம்

வாழ்க்கை ஹஸ்தமித்தாலும்
சேஷ மந்திரத்தால் புத்துயிர் கொடுக்கிறோம்.

சேஷனும் பக்தர்களும்” verse: 138 (19th. May, 2010)


சலனமில்லாமல் ஓடும் ஆற்று நீரைப்போல்

சலனமில்லா மனதை உருவாக்கு சேஷ பக்தா
சேஷன் மா மந்திரம் ஓதினால் மனமும்
சலனமில்லாத ஆற்று நீர் போல் ஆகிவிடும்,

சேஷ பக்தனே!

சேஷனும் பக்தர்களும்” verse: 139 (19th. May, 2010)


சேஷ மந்திரத்தை அருவி நீர் கொட்டுவது போல்
ஜெபித்துவிடு , என் பக்தனே / பக்தையே

அருவி நீர் குளம் போல் மந்திர பலனை சேமித்து
வைத்துக்கொள், என் பக்தனே / பக்தையே

கர்ம வினை சூழும் போது சேமிப்பானது
உன்னை காப்பாற்றும் என் பக்தனே / என் பக்தையே

சேஷ மந்திரம் உனக்கு கவசம் போல் என்பதை
மறந்து விடாதே என் பக்தனே / பக்தையே

அருவியின் அருகிலுள்ள
பசுமையான மரத்தை போல்
உன் வாழ்வும் பசுமை தானே

என் பக்தனே / பக்தையே

கடுமையான பாறைகளுக்கு இடையே மரம்
வளர்வது போல் உன் வாழ்வும் கடுமையான
போட்டிகளுக்கிடையே வளர்ந்து விடும்

மரத்துக்கு நீர் தேவை,
மனதுக்கு சேஷ மந்திரம் தேவை
புரிந்துகொள் என் பக்தனே / பக்தையே

ஸ்ரீ சேஷனும் பக்தர்களும்” verse: 141(13th. June, 2010)

பக்தனின் / பக்தையின் மன எழுச்சி”


என் சிவசேஷனே() … என் சிவசேஷனே(ஏ ஏ)…
என் சிவசேஷனே(ஏ ஏ ஏ)…
என்னுள் நீ இருந்தால் என்றென்றும் சுகமே(ஏ ஏ)….
என்னுயிர் சிவசேஷனே

என் சிவசேஷனே()…என் சிவசேஷனே(ஏ ஏ)…
என் சிவசேஷனே(ஏ ஏ ஏ)…
என் தீவினையை தீர்த்து

துயரம் நீக்குவாயே (ஏ ஏ)…
என்னுயிர் சிவசேஷனே

என் சிவசேஷனே()…என் சிவசேஷனே(ஏ ஏ)…
என் சிவசேஷனே (ஏ ஏ ஏ)…
என் அகந்தையை அழித்து
ஆனந்தம் தருவாயே (ஏ ஏ)…
என்னுயிர் சிவசேஷனே

என் சிவசேஷனே ()…என் சிவசேஷனே (ஏ ஏ)…
என் சிவசேஷனே (ஏ ஏ ஏ)…
என்  சஞ்சலத்தை வேருடன் சாய்த்து
சந்தோஷம் தருவாயே (ஏ ஏ)…
என்னுயிர் சிவசேஷனே


என் சிவசேஷனே()…என் சிவசேஷனே(ஏ ஏ)…

என் சிவசேஷனே(ஏ ஏ ஏ)…
என் பொறாமையைப்போக்கி
பேரின்பம் தருவாயே(ஏ ஏ)…
என்னுயிர் சிவசேஷனே

என் சிவசேஷனே ()…என் சிவசேஷனே(ஏ ஏ)…
என் சிவசேஷனே(ஏ ஏ ஏ)..
என் பேராசையைப்போக்கி
பெருவாழ்வு தருவாயே(ஏ ஏ)…
என்னுயிர் சிவசேஷனே

என் சிவசேஷனே ()…என் சிவசேஷனே(ஏ ஏ)…
என் சிவசேஷனே(ஏ ஏ ஏ)…
என் பிடிவாதத்தைப்போக்கி
நற்பெயர் தருவாயே (ஏ ஏ)…
என்னுயிர் சிவசேஷனே

என் சிவசேஷனே ()…
என் சிவசேஷனே (ஏ ஏ)…
என் சிவசேஷனே (ஏ ஏ ஏ)
என் எல்லாம் எனக்காகஎன்ற எண்ணத்தை நீக்கிடுவாயே (ஏ ஏ)…
என்னுயிர் சிவசேஷனே

என் சிவசேஷனே() … என் சிவசேஷனே(ஏ ஏ)…
என் சிவசேஷனே(ஏ ஏ ஏ)…
என்னுள் நீ இருந்தால் என்றென்றும் சுகமே (ஏ ஏ)….
என்னுயிர் சிவசேஷனே
என்னுயிர் சிவசேஷனே
என்னுயிர் சிவசேஷனே