ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


![]()

“சேஷனும் பக்தர்களும்” verse: 5 (7th. August, 2009 – 6:55 a.m.)
“சேஷா ! என் உயிருக்கு உயிரே!
உனக்கு நமஸ்காரம்!
பொழுது விடிந்தது.
உன் பாத கமலங்களுக்கு மலர் தூவுகிறேன்.
உன் அருளுக்கு அறிகுறியாக
உன் முகம் மலர்கிறதே
ஓ! என் சேஷநாதா!”

“சேஷனும் பக்தர்களும்” verse: 10 (11th. August, 2009 – 2:25 p.m.)
“சூரியன் வர இருள் நீங்கிற்று
சேஷைய்யா உன் முகத்தில் கருணை பொழிக!
வண்டுகள் ஹ்ரீங்காரம் இடுவதற்கு ஒப்ப
நாங்கள் உன்னை போற்றுகிறோம்
மலர் விரிவதற்கு ஒப்ப
உன் கண்கள் துயில் எழுக!
இதில் சேஷா நீர் திருவுள்ளம் செலுத்துக
நீயே ஆனந்த சாகரம் ஆவாய், சேஷைய்யா!”


