Archives

சேஷன் துயில் கொள்ளும் பாட்டு

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே



சேஷனும் பக்தர்களும்” verse: 26 (24th. August, 2009 – 7 a.m.)

சேஷன் துயில் கொள்ளும் பாட்டு

தன் பக்தர்களுடைய
தரம் உயர்த்திய
சேஷனை, துயில் கொள்ளச்செய்வோம், வாரீர்!

தன்மானத்துடன் பக்தர்கள்

வாழ வழி செய்த

சேஷனை, துயில் கொள்ளச்செய்வோம், வாரீர்!

தலை நிமிர்ந்து பக்தர்கள்
தரணியில்

வாழ வழி செய்த

சேஷனை, துயில் கொள்ளச்செய்வோம், வாரீர்!

தம்பூரா மீட்டி
தங்கமான பாதங்களில்
பன்னீர் புஷ்பங்கள் சாற்றி
சேஷனை, துயில் கொள்ளச்செய்வோம், வாரீரே!

தலை வணங்கி கை கூப்பி
பவழமல்லிப் பூக்கள்

பாதங்களில் சாற்றி

பரமனாம் சேஷனை
துயில் கொள்ள செய்வோம்,
வாரீர்! வாரீர்! வாரீரே !


fr