ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


சேஷ பிரம்மம்

“சேஷனும் பக்தர்களும்” verse: 21
(20th. August, 2009 – 7 p.m.)
ஆத்மா மனதை கேட்கிறது…
“ஏ மனமே!
நீ சேஷ மந்திரம்
செம்மையாக செப்பினால்
சுரக்காத சுரப்பியும் சுரந்து விடுமே சுரநீரய்!
ஏ மனமே!
சேஷநாதன் மந்திரம்
மனதில் முறையாக நிறுத்தினால்
நாடி நரம்பெல்லாம்
நல்லதாக மாறி, நாள் கணக்கில்
நன்றாக இருக்குமே!
ஏ மனமே!
நீ உணர மாட்டாயா?”
சேஷ மந்திரம்:
“ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே”
“சேஷனும் பக்தர்களும்” verse: 22 (22nd. August, 2009 – 9:45 a.m.)
ஆத்மா மனதை கேட்கிறது…
“ஏ மனமே! மறக்காதே சேஷ மந்திரத்தை,
ஏ மனமே! மறக்காதே மாமலையாம் அண்ணாமலையை,
ஏ மனமே!மாய்ந்து போகாதே! மனக்குழப்பத்தால்,
ஏ மனமே! மன்னித்து விடு, மன்னிப்பு வேண்டுவோரை,
ஏ மனமே! மலர்கிறாயா இப்போது?
ஏ மனமே! உன் மனக்குழப்பம் தீர்ந்ததா?
நன்றி சொல்லு, சேஷனுக்கு!”
“சேஷனும் பக்தர்களும்” verse: 27 (22nd. August, 2009 – 2 p.m.)
ஆத்ம விசாரணை. ஆத்மா மனிதனிடம் சொல்கிறது…
ஏ மனமே!
நீ செய்யும் நல்லது கெட்டது அனைத்தையும்,
மனசாட்சியாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்…
ஏ மனமே!
நீ இருக்கும் மனித உடம்பில்
நானும் இருக்கிறேன் மனசாட்சியாக!
ஏ மனமே!
உன்னை பழித்தோரை பழிவாங்காதே,
சேஷனிடம் முறையிடு,
உன் குழப்பம் தீரும்.
ஏ மனமே!
உன்னுடன் நான் சேர்ந்து
உடம்பில் இருக்கும்போது,
என் பெயர் ஜீவாத்மா!
ஏ மனமே!
உடம்பை விட்டு
நான் நீங்கும்போது,
என் பெயர் பரமாத்மா!
ஏ மனமே!
மறுபிறவி ,
பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு,
அது உனக்குதான்,
எனக்கல்ல!
ஏ மனமே!
பிரபஞ்சம் முழுழ்வதும்
சக்தியாக
நான் வியாபித்து இருக்கிறேன்!
ஏ மனமே!
நீ மனித உடம்பில்
சஞ்சாரிக்கும் போது
பிரபஞ்ச சக்தியாய்,
ஸூக்ஷ்மமாக உடம்பு முழுவதும்,
ஜீவாத்மனாய் வியாபித்து இருக்கிறேன்!
ஏ மனமே!
உன்னை இந்துக்கள்
‘சிவா’, என ஓதுவார்கள்…
ஏ மனமே!
ஓம் (ப்ரணவ)
என்று நீ ஓதும் மந்திர நயகன்
கணேசன் என் சக்தியின் வடிவமே!
ஏ மனமே!
கணேச சதுர்த்திக்கு
சேஷன் மூலமாக
உன்னை வாழ்த்துகிறேன்!
அண்ணாமலை யோனுக்கு அரோகரா! அரோகரா!
“சேஷனும் பக்தர்களும்” verse: 38 (6th. September, 2009 – 10 a.m.)
பக்தரின் ஆத்மா விசாரணை
“நெஞ்சமே! பதற்றம் கொள்ளாதே!
எல்லாம் சேஷனின் அருளுடன் நடக்கிறது
என்று நினைத்து விடு;
நெஞ்சமே!அமைதி கொள்ளேன், ஏன் வாடுகிறாய்?
நெஞ்சமே! மூல மந்திரத்தை (சேஷன்)
ஜெபித்து விடு!
முக்காலத்திலும் முனைப்புடன் சொல்!
சேஷன் அனுகிரஹம் தானே வந்து விடும்.
நெஞ்சமே! நெறி பிறலாதே!
நெற்றிக் கண்ணன் சேஷன் நிறைவு செய்து விடுவானே!
நெஞ்சமே!அமைதி கொண்டாயா!
சேஷனுக்கு அனந்த கோடி நமஸ்காரம் செய்!
நெஞ்சமே!சேஷன் நினைவுடன் செய்தால்
நீ நினைப்பது போல் எல்லாம் நடக்குமே!
நெஞ்சமே!சேஷன் உன்னை எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும்போது,
நீ ஏன் சேஷனை நினைக்க மறுக்கிறாய்?
சேஷனிடம் பணிந்து விடு, நெஞ்சமே!
சேஷனின் பொற்பாதங்களை சரணமடைந்து விடு!
ஓ! என் நெஞ்சமே!
“சேஷனும் பக்தர்களும்” verse: 47 (24th. September, 2009 – 6:47 a.m.)
தஸ்மை (அப்படிப்பட்ட) ஸ்ரீ குரவே நமஹ!
ப்ரம்மாவுக்குள் ஸரஸ்வதி; விஷ்னுக்குள் மஹாலக்ஷ்மி;
சிவனுக்குள் பார்வதி;
குரு ப்ரம்மா, குருர் விஷ்ணுர், குருதேவோ மஹேஷ்வரஹ,
குரு சாக்க்ஷாத் பரப்ரம்மா (ஆதிமூலம்)
- (குரு கீதை)
“சேஷனும் பக்தர்களும்” verse: 98 (29th. October, 2009 – 6:50 p.m.)
உன் புகழ் பாடுவதே, என் வேலை,
வேளை தோறும், உன் புகழ் பாடுவதே, என் வேலை;
உன் மந்திரம் ஓதுவதே என் வேலை,
வேளை தோறும், உன் மந்திரம் ஓதுவதே,
என் வேலை;
அபயம் தந்திடுக, என் சேஷநாதா!
அருள் அளித்திடுக, என் சேஷநாதா!
சேஷனுக்கு அனந்த கோடி நமஸ்காரம்!
அனைத்தும் உன் செயலே!
நீயோ என்னை ஆட்டுவிப்பவன்;
ஆட்டுவிப்பவனுக்கு, ஆடாதோர் யாரோ!
யாரும் அறியாவண்ணம், என்னை ஆட்கொண்டவனே! சேஷனே!
ஆனந்தமாய் இருக்க,
உமக்கு அனந்த கோடி நமஸ்காரம்!
“சேஷனும் பக்தர்களும்” verse: 103 (3rd. November, 2009 – 8p.m.)
“ஆத்மா மனதிடம் சொல்கிறது”
பக்தி என்பது, மனம் குவித்து
ஒரே தெய்வத்துடன் ஒன்று படுவது;
நல்லது நடந்தாலும், கெட்டது கிடைத்தாலும்,
தெய்வத்தின் மீது குறை பட்டுக் கொள்ளாமலும்,
அடுத்தவர் மீது குற்றத்தை சுமத்தாமலும்,
நவகோள்களையும் குற்றம் கூறாமலும்,
எல்லாவற்றுக்கும் தன் வினை தான் என நினைத்து
குன்றி போகாமலும்;
“சேஷ மந்திரம்” ஜெபம் செய், என் மனமே!
விடாமுயற்ச்சியுடனும், குருவின் பரிபூரண ஆசியுடனும்,
உன் தெய்வத்தின் பேரருளானது,
பாய்ந்து வருமே!
மலையருவி மடுவை நோக்கி
பாய்ந்து வருவது போல்!
ஓ! என் மனமே, நீ இதனை உணரமாட்டாயா?

