Archives

Sesha Mahaan on Lord Vaitheeshwara

 

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


தையல் நாயகியின் மணாளா, வைதீஸ்வரா!
குலம் காக்க வந்த குல தெய்வமே!
குழம்பிய என் குடும்பத்தை, கட்டி காத்திடுவாய்,
சேஷன் என்னும் உருவிலே..
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்!
வையகம் வாழ்த்தும் வைதீஸ்வரா!
வாழையடி வாழையாக எங்கள் குலம் தழைக்க
வந்த வைதீஸ்வரா!வணங்குகிறோம்!

***

வையகம் வாழ்த்தும் வைதீஸ்வரா!
வாழையடி வாழையாக
எங்கள் குலம் டழைக்க வந்த வைதீஸ்வரா!
வணங்குகிறோம், தையல் நாயகி சமேதா உன்னை, வைதீஸ்வரா!

***

வேப்ப மரத்தடியில்
வாழும் ஆதி வைதீஸ்வரா!
அண்டத்தில் உள்ள 4444 ஸஞ்ஜீவனி மருந்துகளையும்
வகையாய் கொண்டு வந்து
மாந்தரின் பிணி தீர்த்து
வாழ வைக்கும் வைதீஸ்வரா!
தைய்யல் நாயகி சமேதராய்
எழுந்தருளும் வைதீஸ்வரா!
முத்துக்குமருடன் பக்தர்களுக்கு
சாந்துருண்டை அளித்து
அனைவரையும் ஆட்ச்சி செய்யும்
புல்லிருக்கு வேலோனே!
உன்னை நமஸ்கரிக்கிறேன்!