Tag Archive | ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

குழந்தை சேஷன்


ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சேஷனும் பக்தர்களும்” verse: 50

(26th. August, 2009 – 6:58 a.m.)
குழந்தை சேஷன்”

சின்னஞ்சிறு குழந்தையிடம்
கொஞ்சி விளையாடும்,
காருண்ய சேஷா!
எனக்கு சொல்ல வந்ததை,
என் குழந்தையிடம் சொல்லிவிட்டு
செல்லும் மாயக் கண்ணா!
மாயக்கூத்தா!
மணம் நிறைந்த மல்லிகை மலரினை, முழு மனதுடன்,
உன் திருவடிக்கு சமர்ப்பிக்கின்றேன், சேஷப்ரம்மமே!


சேஷனின் அழைப்பு

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சேஷனும் பக்தர்களும்” verse: 2 (3rd. August, 2009 – 7:20 a.m.)

பக்தர்களின் உள்ளமே என் சூக்ஷ்ம சன்னிதி”

சேஷனும் பக்தர்களும்” verse: 3 (5th. August, 2009 – 10:18 a.m.)

..எந்தை குருநாதன் இருக்கும் மலை,
அடியேன் சிந்திக்கும் மலை,
அதுவே அண்ணாமலை..”
இப்படி நம் குருநாதர் சேஷனை நினைக்கவேண்டும்.

சேஷனும் பக்தர்களும்” verse: 13 (16th. August, 2009 – 11:50 a.m.)

எள்ளில் எண்ணை போன்றும்,
தயிரில் வெண்ணை போன்றும்,
பரமாத்மனான நீ ஜீவாத்மாவில் (பக்தர்கள்)
அந்தர்யாமியாய் இருக்கிறாய் சிவனே, சேஷனே!”

சேஷனும் பக்தர்களும்” verse: 60 (2nd. October, 2009 – 6:16 a.m.)

சஞ்சித சர்மா”
சஞ்சித கர்மாவை (பல பிறவிகளில் தேடிய தீவினைகள் )
கனவில் காட்டி,
நீக்கிடும் பெருமானே!உன் சேஷ மந்திரம் சொல்வோருக்கு
இப்படி சரியாகிறதே பெருமானே!
உன் பக்தர்களுக்கு இது தெரியுமா, பெருமானே!
உன் பக்தர்களுக்கு இதை உணர்த்துவது,
என் கடமை தானே பெருமானே, சேஷாத்ரி நாதா!

சேஷனும் பக்தர்களும்” verse: 71 (18th. October, 2009 – 1:55 p.m.)

சத்தான
(‘சத்’ – சம்ஸ்கிருத சொல் – உண்மை பொருள் – பரப்ரம்மன்)”
சேஷனை சித்தத்தில்
(
உச்சந்தலை – ஸகஸ்ராரம் – குண்டலினி – 7 வது நிலை),
நிலை நிறுத்தி தியானித்தால்,

கிடைப்பது பேரானந்தம் (BLISS)!
அது தான் சத்-சித்-ஆனந்தா – (சச்சிதானந்தா)!
உணர்ந்தவருக்கு தெரியும் ரகசியம்! ! சேஷபக்தா!
பேரானந்தத்துடன் நீல (blue) புருசன் , ஒளிர் விடுவானே!
ஆக்ஞையிலும்

(புருவங்களின் மத்தி – 6 வது நிலை), தெரியுமா?
! சேஷபக்தா! அப்பொழுது வெளிப்படுவதே தெய்வீக வாக்கு
நீல புருஷனாம் ‘சிவன்’, உருவமற்ற நிலையில்
காட்சி தருவது அதுவே!
ஒளியே பரஞ்ஜோதி! குளிர்ச்சி பொருந்தியது!
நீல நிறத்திலும் ஊதா நிறத்திலும், ஒளி காட்சி,
தபஸ் செய்த பக்தர்களுக்குத்தான் தெரியும்.
இதுவே உண்மை!

சேஷனும் பக்தர்களும்” verse: 72 (18th. October, 2009 – 2:10 p.m.)

படைத்தவன்”
படைத்தவனும் படைக்கப்பட்டதும் ஒன்றே;
ஒன்றுக்குள் ஒன்று;
பண்டிதனுக்கு புரியாத ஒன்று;
படைத்தவனை பண்டிதன் அல்லாத

படிக்காதவனும் தான் யார் ?
என உணரலாமே!
பாண்டித்தியம் தேவையில்லை படைத்தவனைக் காண!
எவராகினும், ஒழுக்கத்தால் சீலனாக இருந்தால்,
ஓங்கார ஒலியினையும் (நாத-ப்ரம்மம்);
சீலத்தை நிலை நிறுத்தி; படைத்தவனை நீல புருஷாக,
ஒளியாக காணலாம், உணரலாம் (ஒளி – நீலம்/ஊதா)
அதுவே ‘பிந்து’ எனப்படுவது. வெறும் படிப்பால் தெரியாது.
தபஸ்’ செய்ய வேண்டும்.
அனுகிரஹம் இருந்தால் மட்டுமே தெரியும்.
லக்ஷத்தில் ஒன்றுக்கு மட்டும், எல்லோருக்கும் அல்ல.
கடைச்சரக்கு அல்ல, வாரி வழங்க!

தன்னை யார்? என உணர்வது. (Self-Realization)
ஒழுக்கத்தில் சீலனே பரப்ரம்மன்;
மனிதருள் மாணிக்கமே , நடமாடும் தெய்வம், நடராஜனே!
தெரிந்து கொள், சேஷ பக்தா!
குருவை நாடிச் செல்.
குருவை சோதனை செய்து உண்மையை உணர்ந்து விடு.
ஏமாந்து போகாதே!
ஓ பக்தா! சேஷ பக்தா!

சேஷனும் பக்தர்களும்” verse: 73 (18th. October, 2009 – 2:20 p.m.)

உணர்த்துவானே சேஷன்”
மாமந்திரமாம் சேஷமந்திரம் ஜெபித்திடு;
கன்னத்தில் கை வைத்திருக்கும் கலியுக சேஷன்
உன் வீட்டில் கள்ளச்சாவி போட்டு,
களவாட நினைக்கும் கள்வர்களை,
உன் கனவில் காட்டிக் கொடுத்து விடுவானே நம் சேஷன்;
உன் உள்ளத்தில் நீ நினைக்கப் போவதையும்,
முன்கூட்டியே உரைத்துவிடுவானே தன் பக்தன் மூலம்;
உன்னாலும் முடியுமென, உன் உள்ளத்திற்கு வரம் அளிக்கும்
உன்னத உரத் தொழிற்சாலை, நம் சேஷன்;
உர மானது சேஷ மந்திரமே!
உன் தன்னம்பிக்கையை தரம் உயர்த்தி,
தரணியில் தன்மானத்துடன், தலை நிமிர்ந்து,
வாழ வழி செய்துவிடுவானே, நம் சேஷன்!

ஓ பக்தனே/பக்தையே!
எழுந்து நில்;
மனச்சோர்வை சேற்றில் புதைத்துவிடு;
புதிய யுகம் உன்னை நோக்கி ஓடிவர,
சேஷன் துணை நிற்பானே!
உன்னால் முடியும், ஓ பக்தனே/பக்தையே!
ஆனால், உன்னால் ‘தான்’ முடியுமென கர்வம் கொண்டுவிடாதே!
தான்’ என்பவருக்கு, ‘அஹங்காரம்’ தான் மிஞ்சும்.
அனைத்தும் அழிவே!

சேஷனும் பக்தர்களும்” verse: 74 (18th. October, 2009 – 2:30 p.m.)

தர்மவிதி”
தவறு செய்தவன் தன்னை உணர்ந்து திருத்திக் கொண்டால்,
தண்டனை இல்லையப்பா, தர்மவிதியில்;
தம்புரானும் தவறு செய்தால்,
தண்டனை உண்டப்பா, தர்மவிதியில்;
தர்மத்தை காட்டி கொடுப்பவனுக்கும்,
தண்டனை உண்டப்பா, தர்மவிதியில்;
தவறு செய்தால் சேஷனிடம் முறையீடு செய்து கொள்.
மன்னித்து விடுவான் மலையப்பன் சேஷன்;
அனுதினமும் மந்திரம் சொல்லி,
முறையீடு செய்து கொள்;
மனம் (உன்) மலர் போன்று மலர்ந்திட ,
முறையீடு செய்து கொள்;
மாமன்னன் சேஷன், மன நிறைவோடு,
மலராக்கி விடுவான் உன் மனதை!
ஓ பக்தனே/பக்தையே!

சேஷனும் பக்தர்களும்” verse: 75(18th. October, 2009 – 2:40 p.m.)

தவிக்க வேண்டாமே”
விடா முயற்ச்சி செய்தால்,
குருவருளும், திருவருளும், தானே திரண்டு வரும்;
திக்கு தெரியாதவரும், தவிக்க வேண்டாமே!
வேண்டாமே , நவ நாயகர்களின் உதவி,
நவ நாயகர்களின் தலைவனாம் சேஷனைப்

பிடித்து விட்டால்!
பிடித்ததும் ஜெபித்து விடு சேஷமந்திரத்தை,
திருநீறும், திருமந்திரமான சேஷமந்திரமும்
உன்னை உயர்த்திவிடுமே!
ஓ பக்த்தனே /பக்தையே!