Archives

சேஷனின் திருவடி மகிமை

ஓம் ஸத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

அவதார் சேஷாத்ரி நாதா!

உன் திருவடிக்கு நமஸ்காரம் ஸ்வாமி!


சேஷனும் பக்தர்களும்” verse: 7 (10th. August, 2009 – 11:17 a.m.)

ஸ்வாமி சேஷா!
நறுமணம் நிறைந்த உனது திருவடியை நாடுகிற எனக்கு
உற்சாகமாகிறது.
நாவால் உன்னை போற்றுகிறேன்.
உன் திருவடிக்கு நமஸ்காரம் ஸ்வாமி!”

சேஷனும் பக்தர்களும்” verse: 9 (11th. August, 2009 – 11 a.m.)

சேஷ திருவடியை புகழுங்கள், தொழுங்கள்;
மலர் கொண்டு அலங்கரியுங்கள்;
மனதை முழுவதும் அவன் பால் நாட்டுபவர்க்கு
துன்பம் இல்லை, இடையுறும் இல்லை!”

சேஷனும் பக்தர்களும்” verse: 15 (20th. August, 2009 – 7:15 a.m.)

பொன் மலையாம் அண்ணாமலையில் வாழும்
ஸ்ரீ (மஹாலக்ஷ்மி) சேஷா!
பஞ்சமா பாவங்களும் பொய்யாய்விடுமே
உன் பாதம் பற்றினால், ஸ்ரீ சேஷா!
உன் பாத சேவை என் காலம் முழுவதும் செய்திட
அனுமதி கொடுத்திடுவாய்
ஶ்ரீ சேஷா!

சேஷனும் பக்தர்களும்” verse: 28 (29th. August, 2009 – 7 a.m.)

அவனியில் காஞ்சிபுரத்தில்
அவதரித்த அற்புதமான அவதாரநாதா!
பக்தர்களின் இருதயத்தில்
வாசம் செய்யும்
ஸ்ரீ சேஷாத்திரிநாதா!
உன் பொற்பாதங்களை பற்றிகொள்ள
அனுமதி அளித்திடுவாய் ஐய்யனே!
ஆசிரியருக்கு
அந்தகாலத்திலும் இந்தகாலத்திலும்
அற்புதங்கள் செய்யும் அருளாளா!
தங்கக்கை உடையவரே!
அன்றும் இன்றும் உன்னை
அண்டியவர்களின் கனவில் வந்து
அற்புதங்கள் செய்யும் அருள்சுடரே!
உனக்கு நமஸ்காரம்!

சேஷனும் பக்தர்களும்” verse: 51 (26th. September, 2009 – 7:24 p.m.)

உறுதியாக சொல்கிறோம்”
புண்ணியம் செய்த சேஷ பக்தர்கள்,
புனலுடன் லுடன் (நீர்) மலர்கள் தூவி,
எம்பெருமான் சேஷன் நாமம் எண்ணினால்,
முன் வினை அகலுமே, உறுதியாக சொல்கிறோம் ,
சேஷ பொற்பாதம் பற்றுவார்,
பொருள் செல்வத்துடன்,
அருள் செல்வமும் பெற்றவர் ஆவார்

உறுதியாக சொல்கிறொம்,
பற்றுக பற்றற்றான் பாதங்களை,

பரிவுடன் பகர்க்கிறோம்!

சேஷனும் பக்தர்களும்” verse: 81 (27th. October, 2009 – 8:53 a.m.)

சேஷன் செவ்வடிகளில் செம்பருத்தி பூக்கள் சாற்றி,
செம்மொழியாம் தமிழில், பாமாலை தொடுத்து,
சேஷன் அனுகிரஹத்தைப் பெற்றிடுவோமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 82 (27th. October, 2009 – 8:57 a.m.)

பேரன்புடன் பன்னீர் புஷ்பங்களை,
சேஷன் பொற்பாதங்களில் சாற்றி,
பராசக்தியின் பேரருளை பெற்றிடுவோமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 83 (27th. October, 2009 – 9:05 a.m.)

முழுமனதுடன் முல்லைப் பூக்களை,
முக்காலமும் உணர்ந்த, மகான்களுக்கு மஹானாம்,
சேஷனின் திருவடிகளில் சாற்றி,
திருவருளை தருமாறு,
தாழ்மையுடன், உரிமையாக, நம் சேஷனைக் கேட்போமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 84 (27th. October, 2009 – 3:02 p.m.)

பவழமல்லிப் பூக்களை,
பரப்ரம்மனாம் சேஷனின் பொற்பாதங்களில்,

பணிவுடன் தூவி, உடன் பாமாலையும் பாடினால்,
பல அற்புதங்கள் நடந்திடுமே
சேஷ பக்தர்களின் வாழ்க்கையிலே!

சேஷனும் பக்தர்களும்” verse: 85 (27th. October, 2009 – 3:09 p.m.)

சென்பக பூக்களையும், சாமந்தி பூக்களையும்,
சரம் சரமாக சேஷனின் செந்நிற திருவடிகளில் சாற்றினால்,
சேஷ பக்தர்களுக்கு சர்வ மங்களமும் உன்டாகுமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 86 (27th. October, 2009 – 3:16 p.m.)

மல்லிகையுடன் மகிழம் பூக்களையும் சேர்த்து உதிரிப்பூக்களாக,
உன் சேஷன் திருவடிகளில் சேர்த்தால்,
சேஷ பக்தர்களின் வாழ்க்கை செம்மையுறுமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 87 (27th. October, 2009 – 3:18 p.m.)

மனம் மகிழ்ந்து, மனோரஞ்சித பூக்களுடனும்,
நாகலிங்க பூக்களுடனும்,
நம் பரமனாம் சேஷனின் மலர் பாதங்களில்,
நம் மனதையும் வைப்போமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 88 (28th. October, 2009 – 4:00 p.m.)

திருநீற்று பச்சை இலைகளையும், துளசி இலைகளையும்,
மாசி பச்சை இலைகளையும், வில்வ இலைகளையும்,
சேஷ ப்ரம்மத்தின், பசுமையான பாதங்களில் சாற்றி,
சேஷனைன் புகழைப் பாரினில் பறை சாற்றுவோமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 95 (29th. October, 2009 – 5:00 p.m.)

செந்தாமரைப் பூவின் இதழ்களை,
சேஷனின் செந்நிறதிருவடிகளில்,
தூவி தூவி பாடுவோமே!
செவ்வரளிப் பூக்களை,
சேஷனின் மலர்ப் பாதங்களில்
மனம் ஒன்றி சாற்றுவோமே!
பிச்சிப் பூக்களை,
பரப்ப்ரம்மத்தின் பஞ்சு போன்ற பாதங்களில்,
பணிவுடன் சமர்ப்பணம் செய்வோமாக!
சேஷ ப்ரம்மத்தின் பற்றற்ற பாதங்களை,
பேரானந்தத்துடன் பற்றிவிட்டால்,
சேஷனும் நம்மை கரை சேர்த்து விடுவாரே!
சேஷப்ரம்மத்தின் பாதங்களில் குடிகொண்டுள்ள காலாக்னி,
நம் வினைகளைப் பொசுக்கிடும் அல்லவோ!
பக்தர்களின் வாழ்க்கையும்,
பசுமை நிறைந்த சோலை ஆகிவிடும் அல்லவோ!

சேஷனும் பக்தர்களும்” verse: 96 (29th. October, 2009 – 5:14 p.m.)

பட்டு ரோஜாக்களை,
பட்டு போன்ற சேஷனின் பாதங்களில் சாற்றி,
ராஜாவின் ராஜாவாக திகழும், சேஷநாதனின்
அனுகிரஹத்தை பெறுவோமே!
பாதிரிப்பூக்களை, பக்தர்களின் ஹிருதயத்தில் குடியிருக்கும்,
சேஷநாதனின் பாதங்களில் மானஸீகமாக சமர்ப்பித்து,
பலரும் புகழும் பாடி, வாழ்க்கை நடத்துவோமே!
மனம் மாறாமல், மரிக்கொழுந்துகளை,
மாமன்னன், மலையப்பன் சேஷாத்ரியின் திருவடிகளில் சமர்ப்பித்து,
சேஷ பக்த சமாஜம்” சேவை புரிவோமே!
சேஷ பக்த சமாஜத்தின்” வலைத் தளத்தை (web-site)
வாரம் ஒரு நாள், ஒருமணி நேரம் பார்த்து,
ஒருவருக்கு ஒருவர், மனம் ஒன்றிப் போவோமே!
வாடிய மனதுக்கு, வலை தளம் பார்த்து,
வரமளித்து மகிழும் சேஷனின் அற்புதங்களை
வாயார புகழ்ந்து பேசுவோமே!

சேஷனும் பக்தர்களும்” verse: 105 (19th. October, 2009 – 6:30 p.m.)

தரிசனம் தருவாய் சேஷா,
உன் திருவடி தரிசனம் தருவாய் சேஷா!
தரணியில் கண்டது போதும், கண்டது போதும்,சேஷா!
காணாத மெய்யறிவை தந்திடு சேஷா!
தந்தென்னை ஆட்கொள்வாய் சேஷா!

சேஷனும் பக்தர்களும்” verse: 114 (12th. February, 2010 – 5:27 a.m.)

பறந்தோடிவா சேஷா
பக்தையை (பக்தனை ) காப்பாற்ற பறந்தோடிவா, சேஷா!
பக்தையை (பக்தனை) காப்பாற்ற பறந்தோடிவா, சேஷா!
உன் திருவடி பற்றிய
பக்தையை (பக்தனை)
காப்பாற்ற பறந்தோடிவா, என் பரந்தாம சேஷா !
உன் நாமமே நினைவாக இருக்கும்
பக்தையை (பக்தனை)
காப்பாற்ற பறந்தோடிவா என் சிவசேஷா !
உன் மந்திரம் மட்டுமே மனதில் மறவாது வைத்திருக்கும்
பக்தையை (பக்தனை)
காப்பாற்ற பறந்தோடிவா என் சிவசக்தி சேஷா !
உன் சேவையை தன் சேவையாக நினைக்கும்
பக்தையை (பக்தனை)
காப்பாற்ற பறந்தோடிவா என் காமாக்ஷி சேஷா!
பறந்தோடிவா ……

சேஷனும் பக்தர்களும்” verse: 120 (5th. April, 2010)

மனம் மாற்றிய சிவ சேஷனே

மாணவ, மாணவிகளின் மனதை மாற்ற
சேஷ மந்திரம்  சொல்ல வைத்தாய்,
எம் பெருமானே, சிவ சேஷனே !
மனதினை மாற்றி,மட்டற்ற

மகிழ்ச்சி கொள்ள வைத்தாய்,

எம் பெருமானே, சிவ சேஷனே !

மனம் (பெற்றோர்) மகிழ,
மாணவ, மாணவிகளின்
மதிப்பெண்கள் நிலையை (grade) உயர வைத்தாய்,
எம் பெருமானே, சிவ சேஷனே !
! சேஷா ! என்று உன்னை எப்போதும் வணங்கும்
(வேதிகா, விருத்திகாபுது டெல்லி)
சிறு குழந்தைகள்

தங்க மெடல் வாங்க வைத்தாய்,
எம் பெருமானே, சிவ சேஷனே !
உன்னுடன் ஸதா பேசிக்கொண்டிருக்கும்
குழந்தைக்கு
(ஹர்ஷ வர்தன் வயது நான்கு பெங்களுரு)
ஞானம் கொடுத்தாய்.
எம் பெருமானே, சிவ சேஷனே !
மலை சுற்றும் (கிரி வல பாதைதிருவண்ணாமலை)
பாதையில்,
தானாகவே (ஹர்ஷ வர்தன்), சாஷ்டாங்கமாய்,
மலையைப்பார்த்து வணங்கவைத்தாய்,
எம் பெருமானே, சிவ சேஷனே !

உன்னிலும் பெரியது எது ?
சிவனின் அவதாரம் எடுத்து,
உன் பக்தர்களை தங்கமயமாக்கும்
எம் பெருமானே, சிவ சேஷனே !
நின் திருவடியை நினைத்து
அனந்த கோடி நமஸ்காரங்களை
சமர்ப்பிக்கிறோம்,
எம் பெருமானே, சிவ சேஷனே !

சிற்றம்பலம்.


சேஷனும் பக்தர்களும்” verse: 128 (7th. May, 2010)

ரோஜாவின் மென்மையான இதழ்
உன் மலரடியை நினைக்க செய்கிறது, சேஷா
ரோஜாவின் மென்மையான இதழ்

உன் மனதினை  நினைக்க செய்கிறது, சேஷா
ரோஜாவின் மென்மையான இதழ்

உன் கருணையை நினைக்க செய்கிறது, சேஷா
ரோஜாவின் மென்மையான இதழ்

உன் அன்பினை நினைக்க செய்கிறது, சேஷா

சேஷனும் பக்தர்களும்” verse: 136 (14th. May, 2010)


பூச்செடி படர்வதற்கு
பச்சைத் தூணைப் பிடித்துக்கொள்கிறது;
பக்தர்களும் பசுமையான வாழ்க்கைக்கு
சேஷனைப் பிடித்துக்கொள்கிறார்கள்.
பற்றுக , பற்றற்ற ஸ்ரீ சேஷ நாதன்
பொற்பாதங்களை, நலமுடன் வாழ்ந்திடவே
பரமசிவனாம் ஸ்ரீ சேஷன் பாரினில்
பறந்தோடி வந்து

பக்தர்களை பாதுகாக்கிறார்
பர ப்ரஹ்மத்தின் பாதங்களை சேவிப்போமே.